பெங்களூரு: கர்நாடகாவில் கிறித்தவ வழிபாட்டுக் கூடங்களின் மீது விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகளின் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கலவரம் வெடித்துள்ளது. கலவரத்தைக் கட்டுப்படுத்த காவலர்கள் தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப் புகை குண்டுகளையும் வீசினர்.