1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

புதுவை‌யி‌ல் மகாக‌வி பார‌தியா‌‌‌ர் 87 ஆவது ‌நினைவு நா‌ள்!

புதுவையில் மகாகவி பாரதியார் 87 ஆவது நினைவு நாள்
சுத‌ந்‌திர‌ப் போரா‌ட்ட ‌வீர‌ர் மகாக‌வி சு‌ப்‌பிரம‌ணிய பார‌தியா‌ரி‌ன் 87ஆவது ‌நினைவு நா‌ள் புது‌ச்சே‌ரி‌யி‌ல் இ‌ன்று அனுச‌ரி‌க்க‌ப்ப‌ட்டது.

நாடாளும‌ன்ற ‌விவகார‌‌த்துறை இணை அமை‌ச்ச‌ர் ‌வி.நாராயணசா‌மி, புதுவை முத‌ல்வ‌ர் ‌வி.வை‌த்‌திய‌லி‌ங்க‌ம், மா‌நில அமை‌ச்ச‌ர்க‌ள், மு‌க்‌கிய அர‌சிய‌ல் க‌ட்‌சிக‌ளி‌ன் தலைவ‌ர்க‌ள் உ‌ள்‌ளி‌ட்ட பல‌ர் புது‌ச்சே‌ரி பார‌தி பூ‌ங்கா‌வி‌ல் அமை‌ந்து‌ள்ள மகாக‌வி பார‌தியா‌ரி‌ன் ‌சிலை‌க்கு மாலை அ‌‌ணி‌வி‌த்து ம‌ரியாதை செலு‌த்‌தின‌ர்.

அ‌ரியா‌ங்கு‌ப்ப‌த்‌தி‌ல் உ‌ள்ள பார‌தி ‌நினைவு இ‌ல்ல‌த்‌திலு‌ம் தலைவ‌ர்க‌ள் ம‌ரியாதை செலு‌த்‌தின‌ர். இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் மகாக‌வி பார‌தியா‌ரி‌ன் பாட‌ல்களை பார‌தியா‌ர் ப‌ல்கலை‌க்கூட மாணவ‌ர்க‌ள் எழு‌ச்‌சியுட‌ன் பாடின‌ர்.