1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

‌மி‌ன்னணு வா‌க்கு‌ப் ப‌திவு எ‌ந்‌திர‌ம் வா‌ங்க ரூ.190 கோடி அனும‌தி!

மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் மக்களவைத் தேர்தல் இந்தியத் தேர்தல் ஆணையம்
2009ஆ‌ம் ஆ‌ண்டு நடைபெற உ‌ள்ள ம‌க்களவை‌த் தே‌ர்த‌லி‌ன் போது பய‌ன்படு‌த்த பு‌திய ‌மி‌ன்னணு வா‌க்கு‌‌ப் ப‌திவு எ‌ந்‌திர‌ங்களை (Electronic Voting Machines (EVMs)) வா‌ங்க ரூ.190 கோடியை அனும‌தி‌த்து ம‌த்‌திய அமை‌ச்சரவை இ‌ன்று ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌த்து‌ள்ளது.

இ‌ந்‌திய‌த் தே‌ர்த‌ல் ஆணைய‌ம் ‌விடு‌த்த வே‌ண்டுகோளை ஏ‌ற்று அடு‌த்த ம‌க்களவை‌த் தே‌ர்‌த‌லி‌ல் பய‌ன்படு‌த்த ரூ.190 கோடி‌யி‌ல் 1,80,000 ‌பு‌திய ‌மி‌ன்னணு வா‌க்கு‌‌ப் ப‌திவு எ‌ந்‌திர‌ங்களை வா‌ங்க ம‌த்‌திய அமை‌ச்சரவை அனும‌தி அ‌ளி‌த்து‌ள்ளது.