புது டெல்லி: நடப்பாண்டின் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையிலான காலத்தில் இந்திய ரயில்வேயின் சரக்குப் போக்குவரத்து 336 மில்லியன் டன் ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் சரக்குப் போக்குவரத்து 309.34 மில்லியன் டன் ஆக இருந்தது. இது 8.62 விழுக்காடு கூடுதலாகும்.