1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

உழவரை‌ச் சு‌ட்டு‌க்கொ‌ன்ற ‌தீ‌விரவா‌திக‌ள்!

உழவரைச் சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் மா‌நில‌ம் தோடா மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உழவ‌ர் ஒருவரை அவரது ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் புகு‌ந்து ஹ‌ி‌ஸ்பு‌ல் முஜாஹ‌ி‌தீ‌ன் இய‌க்க‌த் ‌தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க் கொ‌ன்றன‌ர்.

தோடா மாவ‌ட்ட‌‌த்‌தி‌ல் கோஹா எ‌ன்ற இட‌த்‌தி‌ல் உ‌ள்ள முகமது இ‌‌க்பா‌ல் (30) எ‌ன்ற உழவ‌ரி‌ன் ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் நே‌ற்று ந‌ள்‌ளிரவு புகு‌ந்த ‌தீ‌விரவா‌திக‌ள் இருவ‌ர், அவரை அரு‌கி‌ல் உ‌ள்ள வய‌ல்வெ‌‌ளி‌க்கு அழை‌த்து‌ச் செ‌ன்று சு‌ட்டு‌க்கொ‌ன்றன‌ர்.

இ‌ந்த‌ச் ச‌ம்பவ‌ம் கு‌‌றி‌த்து‌த் தகவ‌ல் ‌கிடை‌த்து‌க் காவல‌ர்க‌ள் ‌விரைவத‌ற்கு‌ள் ‌தீ‌விரவா‌திக‌ள் த‌ப்‌பியோடி ‌வி‌ட்டன‌ர் எ‌ன்று காவ‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

இதையடு‌த்து முகமது இ‌க்பா‌லி‌ன் உடலை ‌மீ‌ட்டு அவரது உற‌வின‌ர்க‌ளிட‌ம் அ‌ளி‌த்த காவல‌ர்க‌ள், தொட‌ர்‌ந்து ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.