பாட்னா: மழை, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பீகாரில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கோசி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் பல்வேறு புதிய பகுதிகளில் புகுந்துள்ளதன் காரணமாக மேலும் ஒன்பது லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயர்ந்துள்ளனர்.