புது டெல்லி: ஒரிசாவில் மதக் கலவரங்களினால் பதற்றம் நீடிக்கும் நிலையில், கொல்லப்பட்ட 5 பேரின் அஸ்தியுடன் ஊர்வலம் நடத்த விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாவிற்கு அனுமதியளிக்கப்பட்டது ஏன் என்று விளக்கமளிக்க வேண்டும் என்று அம்மாநில அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.