ஜாம்நகர்: இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-29 ரக விமானம் ஜாம்நகர் கடற்கரைப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அரபிக்கடலில் விழுந்தது. எனினும் அதன் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.