புவனேஷ்வர்: ஒரிசாவில் பதற்றம் நிறைந்த கந்தமால் மாவட்டத்தில் இன்று நடந்த கலவரங்களில் 24 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும், இன்று கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு சடலங்களுடன் கடந்த ஒருவார கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.