புது டெல்லி: 'வாக்கிற்கு லஞ்சம்' விவகாரம் போஃபர்ஸ் ஊழல் விவகாரத்தைவிட மிகவும் மோசமானது என்று கூறியுள்ள பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி, இந்த விவகாரம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்குத் தெரியாமல் நடந்திருக்காது என்று குற்றம்சாற்றியுள்ளார்.