ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து 7 ஆவது நாளாகக் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் சிறிது சிறிதாக இயல்பு நிலை திரும்பி வருவதாகவும், கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.