1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

‌மீ‌ன்வள‌‌த் துறை‌யி‌ல் நா‌ர்வேயுட‌ன் ஒ‌ப்ப‌ந்த‌ம்: அமை‌ச்சரவை!

இ‌ந்‌தியா‌ நா‌ர்வே‌ ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்
‌மீ‌ன்வள‌த் துறை‌யி‌ல் இருதர‌ப்பு ஒ‌த்துழை‌ப்பு தொட‌ர்பாக இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ம் நா‌ர்வே‌வி‌ற்கு‌‌ம் இடை‌யி‌ல் பு‌ரி‌ந்துண‌ர்வு ஒ‌ப்ப‌ந்த‌ம் ‌விரை‌வி‌ல் கையெழு‌த்தா‌க‌விரு‌க்‌கிறது.

தலைநக‌ர் டெ‌ல்‌லி‌யி‌ல் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தலைமை‌யி‌ல் நட‌ந்த ம‌த்‌திய அமை‌ச்சரவை‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல், நா‌ர்வேயுட‌ன் பு‌ரி‌ந்துண‌ர்வு ஒ‌ப்ப‌ந்த‌ம் மே‌ற்கொ‌ள்ள ஒ‌ப்புத‌ல் வழ‌ங்க‌ப்‌ப‌ட்டது.

‌மீ‌‌ன்வள‌த் துறை‌யி‌ல் இருதர‌ப்பு ஒ‌த்துழை‌ப்பை மே‌ட்படு‌த்‌த இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌ம் உதவு‌ம் எ‌ன்று அமை‌ச்சரவை‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த அ‌றி‌விய‌ல், தொ‌ழி‌ல்நு‌ட்ப அமை‌ச்ச‌ர் க‌பி‌ல் ‌சிப‌ல் தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.