1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

கா‌ஷ்‌மீ‌ரி‌ல் ஆறாவது நாளாக ஊரட‌ங்கு ‌நீடி‌க்‌கிறது!

கா‌ஷ்‌‌மீ‌ர் ஸ்ரீநக‌ர் ஊரட‌ங்கு காவல‌ர் ‌பி.டி.ஐ.
கா‌ஷ்‌‌மீ‌ர் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல் இ‌ன்று தொட‌ர்‌ந்து ஆறாவது நாளாக எ‌ந்த‌த் தள‌ர்வு‌ம் இ‌ன்‌றி ஊரட‌ங்கு உ‌த்தரவு ‌நீடி‌க்‌கிறது.

கா‌ஷ்‌‌மீ‌ர் ப‌‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல் உ‌ள்ள 10 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌லு‌ம் கட‌ந்த ஞா‌யி‌ற்று‌க்‌கிழமை அ‌திகாலை அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்ட ஊரட‌ங்கு உ‌த்தரவு இ‌ன்னு‌ம் தள‌ர்‌த்த‌ப்பட‌வி‌ல்லை எ‌‌ன்று‌ம், ஆ‌ங்கா‌ங்கு பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ரி‌ன் பல‌த்த க‌ண்கா‌ணி‌ப்புட‌ன் பொது ம‌க்க‌ள் த‌ங்களு‌க்கு‌த் தேவையான பொரு‌ட்களை வா‌ங்‌கி‌க்கொ‌ள்ள அனும‌தி‌க்க‌ப்படு‌கி‌ன்றன‌ர் எ‌ன்று‌ம் அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

வருட‌ம் முழுவது‌ம் சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ள் ‌நிறை‌ந்‌திரு‌க்கு‌ம் ஸ்ரீநக‌ர் உ‌ள்‌ளி‌ட்ட பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள மு‌க்‌கிய‌ச் சாலைக‌‌ள் வெ‌றி‌ச்சோடி உ‌ள்ளன. காவல‌ர்க‌ள், துணை ராணுவ‌த்‌தின‌ர் ஆ‌கியோ‌ரி‌ன் வாகன‌ங்க‌ள் ம‌ட்டுமே அடி‌க்கடி தெ‌ன்படு‌கி‌ன்றன எ‌ன்று ‌பி.டி.ஐ. செ‌ய்‌தியாள‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.