பாட்னா: பீகார் மாநிலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை 'தேசியப் பேரழிவு' என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடியை ஒதுக்கியதுடன், நிலைமையைச் சமாளிக்க 1.25 லட்சம் டன் தானியங்களை வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.