1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் ‌விவகார‌ம்: சோ‌னியா ஆலோசனை!

அம‌ர்நா‌த் ஜ‌ம்மு கா‌‌ஷ்‌மீ‌ர் கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தி
அம‌ர்நா‌த் ‌நில மா‌ற்ற ‌விவகார‌த்‌தி‌ல் நட‌‌ந்து வரு‌ம் போரா‌ட்ட‌ங்களா‌ல் ஜ‌ம்மு- கா‌‌ஷ்‌மீ‌ர் மா‌நில‌த்‌தி‌ல் ‌நிலவு‌ம் பத‌ற்றமான சூழ‌ல் கு‌றி‌த்து கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தி இ‌ன்று சக தலைவ‌ர்களுட‌ன் ஆலோசனை நட‌த்‌தினா‌ர்.

சோ‌னியா கா‌ந்‌‌தி‌யி‌ன் இ‌ல்ல‌த்‌தி‌ல் நட‌ந்த இ‌ந்த ஆலோசனை‌யி‌ல் அயலுறவு அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி, உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ‌சிவரா‌ஜ் பா‌ட்டீ‌ல், பாதுகா‌ப்பு அமை‌ச்ச‌ர் ஏ.கே. அ‌ந்தோ‌ணி உ‌ள்‌ளி‌ட்ட கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன் மூ‌த்த தலைவ‌ர்க‌ள் ப‌ங்கே‌ற்றன‌‌ர்.

ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் மா‌நில‌த்‌தி‌ல் பூ‌ஞ்‌ச் மாவ‌ட்ட எ‌ல்லை‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌க் கோ‌ட்டு‌ப் பகு‌தி‌யி‌ல் இ‌ன்று பா‌‌‌கி‌ஸ்தா‌ன் படை‌யின‌‌ரி‌‌ன் அ‌த்து‌மீ‌றி‌த் தா‌க்குத‌லு‌ம், பா‌கி‌ஸ்தா‌ன் பகு‌தி‌யி‌ல் இரு‌ந்து ‌தீ‌விரவா‌திக‌‌ளி‌ன் ஊடுருவ‌ல் முய‌‌ற்‌சியு‌‌ம் நட‌ந்து‌ள்ள ‌நிலை‌யி‌ல் சோ‌னியா கா‌ந்‌தி ஆலோசனை நட‌த்‌தியு‌ள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.