புது டெல்லி: ஜம்மு- காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது பற்றிக் கவலை தெரிவித்துள்ள இந்தியா, சண்டை நிறுத்தம் உறுதியாகக் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.