ஸ்ரீநகர்: அமர்நாத் கோயில் நில மாற்ற விவகாரத்தில் பல்வேறு அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றினால் ஜம்மு- காஷ்மீரில் அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.