1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஜ‌ப்பா‌ன் போ‌ர்‌க் க‌ப்ப‌ல்க‌ள் மு‌ம்பை வருகை!

ஜ‌ப்பா‌ன் உ‌மி‌கி‌ரி அசா‌கி‌ரி கா‌ஷிமா மு‌ம்பை
ஜ‌ப்பா‌ன் நா‌ட்டு‌ப் போ‌ர்‌க் க‌ப்ப‌ல்களான கா‌ஷிமா (ப‌யி‌ற்‌சி‌க் க‌ப்ப‌ல்), அசா‌கி‌ரி, உ‌மி‌கி‌ரி ஆ‌கியவை வரு‌கிற 23 முத‌ல் 26-ஆ‌ம் தே‌தி வரை மு‌ம்பை துறைமுக‌த்‌தி‌ற்கு வருகை தர உ‌ள்ளன.

இ‌தி‌ல் அசா‌கி‌ரி, உ‌மி‌கி‌ரி ஆ‌கிய இர‌ண்டு க‌ப்ப‌ல்களு‌ம் ‌சீ ஹா‌க்(Sea Hawk) ஹெ‌லிகா‌ப்ட‌ர்களுட‌ன் போ‌ர்‌க் கள‌த்‌தி‌‌ல் மு‌ன்‌னி‌ன்று தா‌க்கு‌ம் வ‌ல்லமை கொ‌ண்டவை. இவ‌ை ஒ‌வ்வொ‌ன்‌‌றிலு‌ம் 2,500 ட‌ன் எடையு‌ள்ள பொரு‌ட்களை எடு‌த்து‌ச்செ‌ல்ல முடியு‌ம். 5,000 ட‌ன் எடையு‌ள்ள ப‌யி‌‌ற்‌சி‌க் க‌ப்பலான கா‌ஷிமா‌வி‌ல் 115 படை அ‌திகா‌ரிக‌ள் வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்‌தியா‌வி‌‌‌ல் த‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம் மூ‌ன்று நா‌ட்க‌ளி‌லு‌ம் நமது க‌ப்ப‌ல் படை‌யினருட‌ன் இணை‌‌ந்து ப‌ல்வேறு ப‌யி‌ற்‌சிக‌ளி‌ல் ஜ‌ப்பா‌ன் க‌ப்ப‌ல்க‌ள் ஈடுபட‌ப் போ‌கி‌ன்றன.