1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஜ‌ம்மு‌வி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் படை‌யின‌ர் ‌மீ‌ண்டு‌ம் தா‌க்குத‌ல்!

ஜ‌ம்மு கா‌ஷ்‌மீ‌ர் நெளசேரா பா‌கி‌ஸ்தா‌ன் ராஜூ‌ரி கோ‌ஸ்வா‌மி
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் மா‌நில‌த்‌தி‌ல் நெளசேரா பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள இ‌ந்‌‌திய ராணுவ‌த்‌தின‌ரி‌ன் ‌நிலைகளை‌க் கு‌றிவை‌த்து 6 எ‌றிகணைகளை பா‌கி‌ஸ்தா‌ன் படை‌யி‌னர் ‌வீ‌சியு‌ள்ளன‌ர்.

ராஜூ‌ரி மாவ‌ட்ட‌த்‌தி‌ல் நெளசேரா பகு‌தி‌யி‌ல் ஜ‌ன்கா‌ர்‌க் எ‌ன்ற இட‌த்‌தி‌ல் இ‌ன்று காலை 6.40 ம‌ணி‌யி‌ல் இரு‌ந்து சுமா‌ர் 45 ‌நி‌மிட‌ங்க‌ளு‌க்கு பா‌கி‌ஸ்தா‌‌ன் படை‌யின‌ர் அ‌த்து‌மீ‌றி‌த் தா‌க்குத‌‌ல் நட‌த்‌தியதாக நமது ராணுவ‌ப் பே‌ச்சாள‌ர் லெ‌ப்டின‌ன்‌ட் கலோன‌ல் எ‌ஸ்.டி.கோ‌ஸ்வா‌மி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌ந்த‌த் தா‌க்குத‌லி‌‌ன் போது பா‌கி‌ஸ்தா‌ன் படை‌யின‌ர் ‌வீ‌சிய 6 எ‌றிகணைக‌ள் இ‌ந்‌திய‌ப் பகு‌தி‌யி‌ல் ‌விழு‌‌ந்து வெடி‌த்து‌ள்ளதாகவு‌ம், இ‌தி‌ல் யாரு‌க்கு‌ம் எ‌‌ந்த‌ச் சேதமு‌ம் ஏ‌ற்பட‌வி‌ல்லை எ‌ன்று‌ம் அவ‌‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌ந்த‌த் தா‌க்குதலு‌க்கு எ‌ந்த‌விதமான எ‌தி‌ர்‌த் தா‌க்குதலையு‌ம் நமது படை‌யின‌ர் மே‌ற்கொ‌ள்ள‌வி‌ல்லை, இரு‌ந்தாலு‌ம் எ‌ல்லை‌யி‌ல் க‌ண்கா‌ணி‌ப்பு ‌தீ‌விர‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்றா‌ர் கோ‌ஸ்வா‌மி.