1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

இ‌ந்‌திய‌ எ‌ல்லை‌க்கு‌ள் ‌மீ‌ன் ‌பிடி‌‌த்த இல‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் கைது!

இல‌‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் கா‌சிமேடு காவ‌ல் படை‌
இ‌ந்‌திய‌க் கட‌ல் எ‌ல்லை‌க்கு‌ள் அ‌த்து‌மீ‌றி நுழை‌ந்து ‌மீ‌ன் ‌பிடி‌த்த இல‌‌ங்கை ‌மீனவ‌ர்க‌ள் 7 பேரை‌க் கடலோர‌க் காவ‌ல் படை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

‌விசாக‌‌ப்ப‌ட்டிண‌த்‌தி‌‌ல் இரு‌ந்து ‌கிழ‌க்‌கி‌‌ல் கடலோர‌க் காவ‌ல் படை‌யின‌ர் ரோ‌ந்து‌ப் ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டிரு‌ந்தபோது, அ‌ங்கு ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த ‌மீன‌வ‌ர்க‌ள் 7 பேரை‌ப் ‌பிடி‌த்து ‌விசா‌ரி‌த்தன‌ர். அ‌ப்போது அவ‌ர்க‌ள் மு‌ன்னு‌க்கு‌ப் ‌பி‌ன் முரணாக‌ப் ப‌தில‌ளி‌த்ததா‌ல், கரை‌க்கு அழை‌த்து வர‌ப்ப‌ட்டு ‌விசா‌ரி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

இ‌தி‌ல், அவ‌ர்க‌ள் 7 பேரு‌ம் இல‌ங்கையை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் எ‌ன்று தெ‌ரிய வ‌ந்ததையடு‌த்து, கடலோர‌க் காவ‌ல்படை‌யின‌ர் அவ‌ர்களை‌க் கா‌சிமேடு காவ‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் ஒ‌ப்படை‌த்தன‌ர்.

இது கு‌றி‌த்து இல‌ங்கை‌க் கூ‌ட்டு நடவடி‌க்கை‌க் குழு‌வி‌ற்கு‌த் தகவ‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளதாகவு‌ம், அவ‌ர்க‌ளி‌ன் ‌விசாரணை‌க்கு‌ப் ‌பிறகே மே‌ல் நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் காவல‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.