1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஜ‌ம்மு‌வி‌ல் 10 ‌கிலோ ஆ‌ர்.டி.எ‌க்‌ஸ். ப‌றிமுத‌ல்!

ஜ‌ம்மு ‌ரியா‌ஸி க‌ண்டி புதா‌ல் கரா‌க் கோ‌ஸ்வா‌மி ஆ‌ர்.டி.எ‌க்‌ஸ்
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் மா‌நில‌‌த்‌தி‌ல் 10 ‌கிலோ எடையு‌ள்ள ஆ‌ர்.டி.எ‌க்‌ஸ். வெடிமரு‌ந்தை‌ப் பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் ப‌றிமுத‌ல் செ‌ய்து‌ள்ளன‌ர்.

‌ரியா‌ஸி மாவ‌ட்ட‌‌‌த்‌தி‌ல் க‌ண்டி புதா‌ல் பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள கரா‌க் எ‌ன்ற இட‌‌த்‌தி‌ல் பாதுகா‌ப்பு‌ப் படை‌யினரு‌ம் காவல‌ர்களு‌ம் இணை‌ந்து நட‌த்‌திய தேடுத‌ல் வே‌ட்டை‌யி‌ன்போது 10 ‌கிலோ எடையு‌ள்ள ஆ‌ர்.டி.எ‌க்‌ஸ். வெடிமரு‌ந்து ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டதாக ராணுவ‌ப் பே‌ச்சாள‌ர் லெ‌ப்டின‌ன்‌ட் கலோன‌ல் எ‌ஸ்.டி. கோ‌ஸ்வா‌மி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அம‌‌ர்நா‌‌த் ‌நில மா‌ற்ற ‌விவகார‌த்‌தி‌ல் நட‌ந்து வரு‌ம் போரா‌ட்ட‌ங்களு‌ம் வ‌ன்முறைகளு‌ம் நாளு‌க்கு நா‌ள் அ‌திக‌ரி‌த்து வரு‌ம் ‌நிலை‌யி‌ல், இதுபோல பெருமள‌விலான வெடிபொரு‌ட்க‌ள் ப‌றிழுத‌ல் செ‌ய்ய‌ப்படுவது‌ம் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

பு‌னித அம‌ர்நா‌த் யா‌‌த்‌திரை‌ப் பாதை, வை‌ஷ்ண‌வி கோ‌யி‌ல் செ‌ல்லு‌ம் பாதை உ‌ள்‌ளி‌ட்ட மு‌க்‌‌கிய இட‌ங்க‌ளி‌ல் இதுவரை ஏராளமான வெடிபொரு‌ட்க‌ள் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.