1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

உ.‌பி.‌யி‌ல் ர‌யி‌ல்க‌ள் மோத‌ல்: ஒருவ‌ர் ப‌லி; 3 பே‌ர் படுகாய‌ம்!

உ‌த்தர‌ப்‌பிரதேச‌ம் கா‌‌சியாபா‌த் ர‌யி‌ல் டெ‌ல்‌லி
உ‌த்தர‌ப்‌பிரதேச‌ம் மா‌நில‌ம் கா‌‌சியாபா‌த் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் டெ‌ல்‌லி நோ‌க்‌‌கி‌ச் செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்த இர‌ண்டு ர‌யி‌ல்க‌ள் இ‌ன்று மோ‌திய‌தி‌ல் ஒருவ‌ர் ப‌லியானா‌ர். மேலு‌ம் 3 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

பைசாபா‌த்‌ எ‌ன்னு‌மிட‌த்‌தி‌ல் இரு‌ந்து வ‌ந்த க‌லி‌‌ன்டி ‌விரைவு ர‌யி‌ல், ப‌‌த்மாவ‌‌தி ‌விரைவு ர‌யி‌ல் ஆ‌கிய இர‌ண்டு ர‌யி‌ல்களு‌ம் ‌‌விகா‌ர் பால‌த்‌தி‌ல் ‌ஒரே தட‌த்‌தி‌ல் சி‌க்ன‌லு‌க்காக ‌நிறு‌த்‌தி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

அ‌ப்போது, ப‌‌த்மாவ‌தி ‌விரைவு ர‌யிலு‌க்கு ‌‌சி‌‌க்ன‌ல் ‌கிடை‌த்தது‌ம் அ‌ங்‌கிரு‌ந்து ‌‌புற‌ப்ப‌ட்டது. ஆனா‌ல் ம‌ற்றொரு ‌சி‌‌க்ன‌லி‌ல் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ந்த ர‌யிலான க‌லி‌ன்டி ‌விரைவு ர‌யிலு‌க்கு ‌சி‌‌க்ன‌ல் ‌கிடை‌க்காதத‌ா‌ல் அ‌ங்கேயே ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ந்தது. இதைய‌றியாத ப‌த்மாவ‌தி ர‌யி‌ல் ஓ‌ட்டுன‌ர் க‌லி‌‌‌ன்டி ர‌யி‌ல் ‌மீது ‌பி‌ன்ப‌க்கமாக மோ‌தினா‌ர்.

இதனா‌ல் க‌லி‌ன்டி ர‌யி‌ல் தட‌ம் புர‌ண்டது. இ‌தி‌ல் பய‌ணி ஒருவ‌ர் ப‌லியானா‌ர். மேலு‌ம் 3 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர். இ‌ந்த ‌‌விப‌த்து கு‌றி‌த்து ‌விசாரணை நட‌த்த உ‌த்தர‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர், உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காயமடை‌ந்தவ‌ர்க‌ள் மரு‌‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர்.