பாரமுல்லா: பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீருக்குள் நுழைய முயன்றவர்களின் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் ஷேக் அப்துல் அஜீஸ் உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 80 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.