1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அம‌ர்நா‌த் யா‌த்‌திரை த‌ற்கா‌லிக ‌நிறு‌த்த‌ம்!

பல‌த்த மழை அம‌ர்நா‌த் ஜ‌ம்மு ஸ்ரீநக‌ர்
பல‌த்த மழையா‌ல் ஜ‌ம்மு- ஸ்ரீநக‌‌ர் தே‌சிய நெடு‌ஞ்சாலை‌யி‌ல் ‌நில‌‌ச்ச‌ரிவு ஏ‌ற்ப‌ட்டு‌ப் போ‌க்குவர‌த்து‌ தடைப‌ட்டதா‌ல், பு‌னித அம‌ர்நா‌த் யா‌த்‌திரை த‌ற்கா‌லிகமாக ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

"ஜ‌ம்மு பகு‌தி முழுவது‌ம் பல‌த்த மழை பெ‌ய்து வருவதாலு‌ம், அதனா‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ‌நில‌ச்ச‌ரி‌வினா‌ல் ஜ‌ம்மு- ஸ்ரீநக‌ர் தே‌சிய நெடு‌ஞ்சாலை‌யி‌ல் போ‌க்குவர‌த்து பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாலு‌ம், பு‌‌னித அம‌ர்நா‌த் யா‌த்‌திரையை‌த் த‌ற்கா‌லிகமாக ‌நிறு‌த்த வே‌ண்டிய க‌ட்டாய‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது" எ‌ன்று அரசு பே‌ச்சாள‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அம‌ர்நா‌த் கோ‌யி‌ல் ‌நில மா‌ற்ற‌ ‌விவகார‌‌ம் தொட‌ர்பாக ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரி‌ல் வெடி‌த்து‌ள்ள வ‌ன்முறைக‌ளி‌ன் காரணமாக, அம‌ர்நா‌த்‌தி‌ற்கு வரு‌ம் ப‌க்த‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை குறை‌ந்து‌ள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

கட‌ந்த ஜூலை 17 இ‌ல் துவ‌ங்‌கிய யா‌த்‌திரை வரு‌கிற 16 ஆ‌ம் தே‌தி பெள‌ர்ண‌மி ‌தின‌த்துட‌ன் முடிவடை‌கிறது.