ஸ்ரீநகர்: அமர்நாத் விவாரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளைக் கண்டித்து ஹூரியத் மாநாட்டுக் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ள போராட்டம் காரணமாக ஸ்ரீநகரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.