1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

மு‌ன்பேர ஒ‌ப்ப‌ந்த‌ச் ச‌ட்ட‌த்‌தி‌ல் ‌‌திரு‌த்த‌ம்: அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!

ம‌‌க்களவை‌ அமை‌ச்சரவை க‌பி‌ல் ‌சிப‌ல் வ‌ர்‌த்தக‌ச் ச‌ந்தை
ம‌‌க்களவை‌யி‌ல் ‌நிலுவை‌யி‌ல் உ‌ள்ள மு‌ன்பேர வ‌ர்‌த்தக ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள் ஒழு‌ங்குமுறை‌ச் ச‌ட்ட‌த்‌தி‌ல் ‌சில ‌திரு‌த்த‌ங்களை‌க் கொ‌ண்டுவர ம‌த்‌திய அமை‌ச்சரவை இ‌ன்று ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌த்து‌ள்ளது.

இ‌ந்த‌த் ‌திரு‌த்த‌ங்க‌‌ள், ச‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள தேவைய‌ற்ற பகு‌திக‌ளை ‌நீ‌க்‌கி, நாடாளும‌ன்ற‌ம் அ‌ந்த‌ச் ச‌ட்ட‌த்தை‌ப் ப‌ரி‌சீ‌லி‌த்து ஒ‌ப்புத‌ல் வழ‌ங்குவத‌ற்கு வ‌ழி வகு‌க்கு‌ம் எ‌ன்று ம‌த்‌திய அ‌றி‌விய‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப அமை‌ச்ச‌ர் க‌பி‌ல் ‌சிப‌ல் தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

இ‌ந்த‌ச் ச‌ட்ட‌ம் ‌நிறைவே‌றினா‌ல், மு‌ன்பேர வ‌ர்‌த்தக‌ச் ச‌ந்தை ஒழு‌ங்குமுறை ஆணைய‌த்‌தி‌ற்கு கூடுத‌ல் அ‌திகார‌ங்க‌ள் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்பதுட‌ன், தடைய‌ற்ற வ‌ர்‌த்தக‌த்‌தி‌ற்கு ‌சில க‌ட்டு‌ப்பாடுக‌ள் உருவாகு‌ம்.