1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அம‌ர்நா‌த் கோ‌வி‌ல் வா‌ரிய உறு‌ப்‌பின‌ர்க‌ள் அனைவரு‌ம் பத‌வி‌விலக‌ல்!

அம‌ர்நா‌த் ஜ‌ம்மு எ‌ன்.எ‌ன்.வோரா
பு‌னித அம‌ர்நா‌த் குகை‌க் கோ‌யி‌ல் வா‌ரிய‌ உறு‌ப்‌‌பின‌ர்‌க‌ள் அனைவரு‌ம் இ‌ன்று ஒ‌ட்டுமொ‌த்தமாக‌ப் பத‌வி‌வில‌கின‌ர்.

ஜ‌ம்மு‌வி‌ல் உ‌ள்ள பு‌னித அம‌ர்நா‌த் குகை‌க்கோ‌யி‌ல் வா‌ரிய‌த்தை‌க் கலை‌த்து‌வி‌ட்டு, பு‌திதாக அமை‌க்க‌‌த் ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌ற்கு வச‌தியாக, வா‌ரிய உறு‌ப்‌பின‌ர்களான ஓ‌ய்வுபெ‌ற்ற ‌நீ‌திப‌தி ‌ஜி.டி.ச‌ர்மா, பேரா‌சி‌ரிய‌ர் ‌வி‌ஷ்ணு மூ‌ர்‌த்‌தி சா‌ஸ்‌தி‌ரி, சு‌‌னி‌ல் ச‌ச்தேவா, மனோ‌ஜ் கவு‌ர், முனைவ‌ர் ‌விமலா தா‌ர், பேரா‌‌சி‌ரிய‌ர் ‌நீர‌ஜ் மா‌ட்டூ, ரகு மோடி, முனைவ‌ர் அரு‌‌ண் குமா‌ர் ஆ‌கிய எ‌ட்டு‌ப் பேரு‌ம் இ‌ன்று பத‌வி‌‌வில‌கின‌ர்.

இவ‌ர்க‌ளி‌ன் பத‌வி‌விலக‌ல் கடித‌ங்களை கோ‌யி‌ல் வா‌ரிய‌த்‌தி‌ன் தலைவரு‌ம், ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் மா‌நில ஆளுநருமான எ‌ன்.எ‌ன்.வோரா ப‌ரி‌சீ‌லி‌த்து வருவதாக வா‌ரிய‌ப் பே‌ச்சாள‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.