1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ர‌ஜி‌னி‌க்கு‌க் க‌ர்நாடக அரசு ந‌‌ன்‌றி!

ஒகேன‌க்க‌ல் ர‌ஜி‌னி ஈ‌ஸ்வர‌ப்பா
ஒகேன‌க்க‌ல் ‌பிர‌ச்சனை‌யி‌ல், தனது பே‌ச்சு‌க் கு‌றி‌த்து‌த் தகு‌ந்த நேர‌த்‌தி‌ல் உ‌ரிய ‌விள‌க்கம‌ளி‌த்து பத‌ற்ற‌த்தை‌த் த‌ணி‌த்தத‌ற்காக நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌தி‌ற்கு க‌ர்நாடக அரசு ந‌ன்‌றி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

"ஒகேன‌க்க‌ல் ‌விவகார‌த்‌தி‌ல் த‌மி‌ழ்‌த் ‌திரையுல‌கின‌ர் 8 ம‌ணி நேர‌ உ‌ண்ணா‌விரத‌த்தை மே‌ற்கொ‌ண்டபோது, நடிக‌ர் ர‌ஜி‌னி பே‌சிய கரு‌த்து‌க்களா‌ல் பத‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டது. த‌ற்போது தா‌ன் பே‌சிய கரு‌த்து‌க்க‌ள் கு‌றி‌த்து அவரே ‌விள‌க்கம‌‌ளி‌த்து‌ள்ளா‌ர். இது எ‌ங்களு‌க்கு ம‌கி‌ழ்‌ச்‌சிய‌ளி‌க்‌கிறது." எ‌ன்று க‌ர்நாடக அமை‌ச்‌ச‌ர் ஈ‌ஸ்வர‌ப்பா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.