1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அ‌த்வா‌னி- ஆஃ‌ப்க‌ன் அ‌திப‌ர் ச‌ந்‌தி‌ப்பு!

டெ‌ல்‌லி ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன் ஹ‌மீ‌‌த் க‌ர்சா‌ய்
டெ‌ல்‌லி வ‌ந்து‌ள்ள ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் ஹ‌மீ‌‌த் க‌ர்சா‌ய், பா.ஜ.க.‌வி‌ன் மூ‌த்த தலைவ‌ர் எ‌ல்.கே.அ‌த்வா‌னியை‌ச் ச‌ந்‌தி‌த்து‌ப் பே‌சினா‌ர்.

இ‌ந்த‌ச் ச‌ந்‌தி‌ப்‌பி‌ற்கு‌ப் ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அ‌த்வா‌னி, "காபூ‌லி‌ல் இ‌ந்‌திய‌த் தூதரக‌த்‌தி‌ற்கு அரு‌கி‌ல் தா‌க்குத‌ல் நட‌ந்‌திரு‌ப்பது இ‌ந்‌திய ம‌ண்ணை, இ‌ந்‌திய‌ச் சொ‌த்தை கு‌றிவை‌த்து‌த் தா‌க்குவத‌ற்கு‌ச் சம‌ம். இ‌ந்த‌ச் ச‌ந்‌‌தி‌ப்‌பி‌ன் ‌பி‌ன்ன‌ணி‌யி‌ல் ஐ.எ‌ஸ்.ஐ.‌க்கு‌த் தொட‌ர்பு இரு‌ப்பதாக‌ தகவ‌ல்க‌ள் வெ‌ளியா‌‌கியு‌ள்ளன. எனவே இ‌ந்த ‌விவகார‌த்‌தி‌ல் ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன் உடனடியாக நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம்" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், இருதர‌ப்பு ந‌‌ல்லுறவுக‌ளை மே‌ம்படு‌த்துவது தொட‌ர்பாகவு‌ம், பய‌ங்கரவாத‌த்தை‌க் க‌ட்டு‌ப்படு‌த்துவது தொட‌ர்பாகவு‌ம் இருவரு‌ம் ‌விவா‌தி‌த்து‌ள்ளதாகவு‌ம் அ‌த்வா‌னி கூ‌றினா‌ர்.