1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஜ‌ம்மு‌வி‌ல் 2 ‌கிலோ ஆ‌ர்.டி.எ‌க்‌ஸ். ப‌றிமுத‌ல்!

ஜ‌ம்மு ஆ‌‌ர்.டி.எ‌க்‌‌‌ஸ் கா‌ஷ்‌மீ‌ர் தோடா
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல் பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் நட‌த்‌திய அ‌திரடி‌ச் சோதனை‌யி‌ல் பது‌ங்கு‌ழி‌யி‌ல் பது‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த 2 ‌கிலோ ஆ‌‌ர்.டி.எ‌க்‌‌‌ஸ். உ‌‌ள்‌ளி‌ட்ட ஏராளமான வெடி பொரு‌ட்‌க‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் மா‌நில‌ம் தோடா மாவ‌ட்ட‌த்‌தி‌ல் ம‌ர்மா‌த் எ‌ன்ற பகு‌தி‌யி‌ல் இ‌ன்று அ‌திகாலை பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் நட‌த்‌திய அ‌திரடி‌ச் சோதனை‌யி‌ல் ‌தீ‌‌விரவா‌திக‌ளி‌ன் பது‌‌ங்கு கு‌ழி ஒ‌ன்று க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டது.

அ‌தி‌ல் பது‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த 2 ‌கிலோ ஆ‌ர்.டி.எ‌க்‌ஸ், ஒரு கை‌த்து‌ப்பா‌‌க்‌கி, கையெ‌றி கு‌ண்டுக‌ள், 50 சு‌ற்று ஏ.கே. து‌ப்பா‌க்‌கி‌த் தோ‌ட்டா‌க்க‌ள், 2 வய‌ர்லெ‌ஸ் கரு‌‌விக‌ள் ஆ‌கியவை ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

இது தொட‌ர்பாக இதுவரை யாரு‌ம் கைது செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று பாதுகா‌ப்பு அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.