புது டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிற்குச் சமாஜ்வடி அளித்துள்ள திடீர் ஆதரவிற்கு, அக்கட்சியின் தலைவர்களான முலாயம் சிங் யாதவ், அமர்சிங் ஆகியோரின் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்தான் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாற்றியுள்ளது.