ராமேஸ்வரம்: மீனவர்களின் மீது சிறிலங்கப் படை நடத்தும் தாக்குதல் குறித்து கவலை தெரிவித்த பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், கச்சத்தீவில் இந்திய மீனவர்களுக்கு உள்ள உரிமை தொடர்பாக சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பிரதமர் மன்மோகன் சிங் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.