1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

மாயாவ‌தி ‌பிரதம‌ர் வே‌ட்பாள‌ர் இ‌ல்லை: ‌பிரகா‌ஷ் கார‌த்!

பகுஜ‌ன் சமா‌ஜ் மாயாவ‌தி ‌பிரகா‌ஷ் கார‌த்
வர‌விரு‌க்கு‌ம் ம‌க்களவை‌த் தே‌ர்த‌லி‌ல் பகுஜ‌ன் சமா‌ஜ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் மாயாவ‌தி த‌ங்க‌ளி‌ன் ‌பிரதம‌ர் வே‌ட்பாள‌ர் அ‌ல்ல எ‌ன்று மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ‌பிரகா‌ஷ் கார‌த் ‌தி‌ட்டவ‌ட்டமாக‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ம‌த்‌தி‌யி‌‌ல் ஆளு‌ம் ஐ.மு.கூ. அரசுட‌ன் த‌ங்களு‌க்கு உ‌ள்ள எ‌ல்லா உறவுகளு‌ம் மு‌றி‌ந்து‌வி‌ட்டன எ‌ன்று‌ கூ‌றிய கார‌த், அடு‌த்த ம‌க்களவை‌த் தே‌ர்தலு‌க்கு‌ப் ‌பி‌ன்புகூட கா‌ங்‌கிரசு‌க்கு ஆதரவ‌ளி‌க்கு‌ம் எ‌ண்ண‌ம் இ‌ல்லை எ‌ன்றா‌ர்.

"கா‌ங்‌கிரசுட‌ன் எ‌ங்களு‌க்‌கிரு‌ந்த உறவுக‌ள் மு‌றி‌ந்து‌வி‌ட்டன. அடு‌த்த தே‌ர்தலு‌க்கு‌ப் ‌பி‌ன்ன‌ர்கூட கா‌ங்‌கிர‌‌ஸ் தலைமை‌‌யிலான ஐ‌க்‌‌கிய மு‌ற்போ‌க்கு‌க் கூ‌ட்ட‌ணி‌க்கு ஆதரவ‌ளி‌க்க மா‌ட்டோ‌ம்.

பகுஜ‌ன் சமா‌ஜ் க‌ட்‌சியுட‌ன் நா‌ங்க‌ள் கொ‌ண்டு‌ள்ள உறவு மு‌ற்‌றிலு‌ம் தே‌ர்த‌ல் சா‌ர்‌ந்தது. இரு‌ந்தாலு‌ம் எ‌ங்க‌ளி‌ன் ‌பிரதம‌ர் வே‌ட்பாள‌ர் மாயாவ‌தி அ‌ல்ல." எ‌ன்றா‌ர் கார‌த்.

மேலு‌ம், த‌ற்போது உ‌தி‌த்து‌ள்ள பு‌திய அ‌ணி மூ‌ன்றாவது அ‌ணி அ‌ல்ல எ‌ன்று தெ‌ளிவுபடு‌த்‌திய கார‌த், மூ‌ன்றாவது அ‌ணி எ‌ன்பது குறை‌ந்தப‌ட்ச‌ப் பொது‌ச் செய‌ல்‌தி‌ட்ட‌த்தை அடி‌ப்படையாக‌க் கொ‌ண்டு அமையு‌ம் எ‌ன்றா‌ர்.