சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் வெடிக்காமல் கிடந்த குண்டுகள் கைப்பற்றப்பட்ட இடத்தை முதல்வர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். தீவிரவாதிகள் பற்றிய தகவல் அளிப்போருக்கு 51 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று நரேந்திர மோடி அறிவித்தார்.