1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

பெ‌ங்களூ‌ரி‌ல் 4 இட‌ங்க‌ளி‌ல் கு‌ண்டு வெடி‌ப்பு: ஒருவ‌ர் ப‌லி!

பெ‌ங்களூ‌‌ர் மடிவாலா நய‌ந்தஹ‌ல்‌லி
பெ‌ங்களூ‌ரி‌ல் அடு‌த்தடு‌த்து 4 இட‌ங்க‌ளி‌‌ல் நட‌ந்து‌ள்ள கு‌ண்டு வெடி‌ப்புக‌ளி‌ல் ஒருவ‌ர் ப‌லியா‌கியு‌ள்ளதுட‌ன், பல‌ர் படுகாயமடை‌ந்து‌ள்ளதாக முத‌ல் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌‌ன்றன.

பெ‌ங்களூ‌‌ரி‌ல் அசோ‌க் நக‌ர், கா‌ந்‌தி நக‌ர், மடிவாலா, நய‌ந்தஹ‌ல்‌லி ஆ‌கிய 4 இட‌ங்க‌ளி‌ல் இ‌ன்று ம‌திய‌ம் 1.30 ம‌ணிய‌ள‌வி‌ல் அடு‌த்தடு‌த்து கு‌ண்டுக‌ள் வெடி‌த்து‌ள்ளன.

2 முத‌ல் 12 ‌நி‌மிட இடைவெ‌ளி‌யி‌ல் நட‌ந்து‌ள்ள இ‌ந்த‌த் தொட‌ர் கு‌ண்டு வெடி‌ப்புக‌ளி‌ல் பெ‌ண் ஒருவ‌ர் ப‌லியா‌கியு‌ள்ளதுட‌ன் பல‌ர் படுகாயமடை‌ந்து‌ள்ளதாக தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌‌க்‌கி‌ன்றன.

இ‌ந்த‌ச் ச‌ம்பவ‌த்தை அடு‌த்து பெ‌ங்களூ‌ர் நகர‌ம் முழுவது‌ம் தொலைபே‌சி இணை‌ப்புக‌ள் செய‌லிழ‌ந்து‌ள்ளன.

மேலு‌ம் ‌விவர‌ங்க‌ள் எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கி‌ன்றன.