ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் கோடைகாலத் தலைநகரான ஸ்ரீநகர் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டத்தினிடையில் நடந்த குண்டு வெடிப்பில் புனித அமர்நாத் குகைக்கோயிலிற்கு செல்வதற்காக காத்திருந்த 5 பக்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.