1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

7.15 ம‌ணி‌க்கு ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்பு!

‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் சோ‌ம்நா‌த் சா‌ட்ட‌ர்‌ஜி
‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் கொ‌ண்டுவ‌ந்து‌ள்ள ந‌ம்‌பி‌க்கை‌த் ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன் ‌மீது மாலை 7.15 ம‌ணி‌க்கு வா‌க்கெடு‌ப்பு நட‌க்கு‌ம் எ‌ன்று ம‌க்களவை‌த் தலைவ‌ர் சோ‌ம்நா‌த் சா‌ட்ட‌ர்‌ஜி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பா.ஜ.க. எ‌ம்.‌பி.‌க்க‌ள் பண‌த்தை‌க் கொ‌ட்டியதை‌த் தொட‌ர்‌ந்து ஏ‌ற்ப‌ட்ட அம‌ளியா‌ல் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்ட ம‌க்களவை, ‌மீ‌ண்டு‌ம் 6 ம‌ணி‌க்கு‌க் கூடியபோது அம‌ளி ‌நீடி‌த்தது.

அ‌ப்போது, ந‌ம்‌பி‌க்கை ‌தீ‌ர்மான‌த்‌தி‌ன் ‌மீதான ப‌திலுரையை ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் 6.30 ம‌ணியள‌வி‌ல் வழ‌ங்குவா‌ர் எ‌ன்று‌‌ம், அத‌ன்‌பிறகு 7.15 ம‌ணி‌க்கு ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்பு நட‌க்கு‌ம் எ‌ன்று‌‌ம் அவை‌த் தலைவ‌ர் சோ‌ம்நா‌த் சா‌ட்ட‌ர்‌ஜி அ‌றி‌வி‌த்தா‌ர்.

‌பி‌ன்ன‌ர் அவை ‌மீ‌ண்டு‌ம் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டது.