1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

எ‌ல்.கணேச‌ன், செ‌ஞ்‌சி ராம‌ச்ச‌ந்‌திரனை தகு‌தி‌நீ‌க்க வே‌ண்டு‌ம்: வைகோ!

ம.‌தி.மு.க. எ‌ல்.கணேச‌ன் செ‌ஞ்‌சி ராம‌ச்‌சந்‌திர‌ன்
ம.‌தி.மு.க. அ‌திரு‌ப்‌தி எ‌ம்.‌‌பி.‌க்க‌ளான எ‌ல்.கணேச‌ன், செ‌ஞ்‌சி ராம‌ச்‌சந்‌திர‌ன் ஆ‌கியோரை‌‌த் தகு‌தி‌நீ‌க்க‌ம் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இ‌‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌த்‌‌தி‌ல் ம‌த்‌திய அர‌சி‌ற்கு எ‌திராக வா‌க்க‌ளி‌க்க‌ப் போவதாக வைகோ அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர். ஆனா‌ல், செ‌ஞ்‌சி ராம‌ச்ச‌ந்‌திர‌ன், எ‌ல்.கணேச‌ன் ஆ‌கிய இருவரு‌ம் ம‌த்‌திய அர‌சி‌ற்கு ஆதரவாக வா‌க்க‌ளி‌க்க‌ப் போவதாக அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், அ‌திரு‌ப்‌தி எ‌ம்.‌பி.‌க்க‌ள் இருவரு‌ம் ம.‌தி.மு.க.‌வி‌ல் இரு‌ந்து ‌வில‌கி‌வி‌ட்டதா‌ல் அவ‌ர்களை‌‌த் தகு‌தி‌நீ‌க்க‌ம் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று ம‌க்களவை‌த் தலைவ‌ர் சோ‌ம்நா‌த் சா‌ட்ட‌ர்‌ஜி‌க்கு வைகோ கடித‌ம் அனு‌ப்‌பியு‌ள்ளா‌ர் எ‌ன்று ம.‌தி.மு.க. வ‌ட்டார‌ங்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.