1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

‌பீகா‌ரி‌ல் ‌வாகன‌ம் க‌‌வி‌ழ்‌ந்து 20 பே‌‌ர் ப‌லி!

பீகா‌ர் பா‌ட்னா ‌வாகன‌ம் 20 பே‌ர் ப‌லி
பீகா‌ர் தலைநக‌ர் பா‌ட்னா‌வி‌ல் ‌‌திருமண ‌நிக‌ழ்‌ச்‌சி‌க்கு செ‌ன்று‌‌வி‌ட்டு ‌வீடு ‌திரு‌ம்‌பி கொ‌ண்டிரு‌ந்தவ‌ர்க‌ள் வ‌ந்த ‌வாகன‌ம் குள‌த்‌தி‌ல் க‌வி‌ழ்‌ந்து ‌விழு‌ந்த‌தி‌ல் 10 பெ‌ண்க‌ள், 9 குழ‌ந்தைக‌ள் உ‌ள்பட 20 பே‌ர் உட‌ல் நசு‌ங்‌கி ப‌லியானா‌ர்க‌ள்.

அல‌ம்க‌ன்‌ஜ் எ‌ன்னு‌‌மிட‌த்‌தி‌ல் உ‌ள்ள கோ‌வி‌‌லி‌ல் நட‌ந்த ‌திருமண ‌நிக‌ழ்‌ச்‌சி‌‌யி‌‌‌ல் கல‌ந்து கொ‌ண்டு ஜா‌னிபூ‌‌‌ரி‌ல் உ‌ள்ள அவ‌ர்க‌ளது ‌வீ‌ட்டு‌க்கு ‌வாகன‌ம் ‌வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்த போது, பல‌த்த மழை பெ‌ய்து கொ‌ண்டிரு‌ந்ததா‌ல் வாகன‌ம் க‌ட்டு‌ப்பா‌ட்டை இழ‌ந்து த‌றிகெ‌ட்டு ஓடியதாக தெ‌ரி‌கிறது.

இதனா‌ல் சாலையோர‌த்‌தி‌ல் இரு‌ந்த குள‌த்‌தி‌ல் ‌வாகன‌‌ம் க‌‌வி‌ழ்‌ந்து ‌விழு‌ந்து‌ள்ளது. ‌ப‌லியானவ‌ர்க‌ள் அனைவரு‌ம் மண‌ப்பெ‌ண்‌‌ணி‌‌ன் ‌வீ‌ட்டை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள்.

ப‌லியான‌வ‌ர்க‌ளி‌ன் உட‌ல்க‌ள் அனை‌த்து‌‌ம் ‌மீ‌ட்க‌ப்ப‌ட்டு அரு‌கி‌லு‌ள்ள மரு‌‌த்துவமனை‌‌க்கு ‌பிரேத ப‌ரிசோதனை‌க்காக அனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளதாக காவ‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளன‌ர்.