1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

கா‌ஷ்‌மீ‌ர்: ஹ‌ி‌ஸ்பு‌ல் இய‌க்க ‌தீ‌விரவா‌திக‌ள் கைது!

கா‌ஷ்‌மீ‌ர் ரஜோ‌ரி ஹ‌ி‌ஸ்பு‌ல் முஜா‌ஹ‌ி‌‌‌தீ‌ன்
ஐ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் மா‌நில‌‌‌ம் ரஜோ‌ரி மாவ‌ட்ட‌த்‌தி‌ல் ஹ‌ி‌ஸ்பு‌ல் முஜா‌ஹ‌ி‌‌‌தீ‌ன் இ‌‌ய‌க்க‌த் தலைவ‌ர் சையது சலாவு‌தி‌னு‌க்கு நெரு‌க்கமானவ‌ர் உ‌ள்பட இர‌ண்டு ‌தீ‌விரவா‌திக‌ள் இ‌ன்று பாதுகா‌ப்பு படை‌யினரா‌ல் கைது ச‌ெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

தீ‌விரவா‌திக‌ளி‌ன் நடமா‌ட்ட‌ம் தொட‌ர்பாக‌க் ‌கிடை‌த்த ரக‌சிய‌த் தகவ‌லி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் நே‌ற்‌று ந‌‌ள்‌ளிரவு ரஜோ‌ரி-ஜ‌ம்மு நெடு‌‌ஞ்சாலை‌ பகு‌தி‌யி‌‌ல் பாதுகா‌ப்பு‌ப் படை‌யின‌ர் ‌‌தீ‌‌விர தேடுத‌ல் வே‌ட்டை‌யி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

அ‌ப்போது அ‌‌‌வ்வ‌ழியாக வ‌ந்த அ‌ப்து‌ல் ர‌ஷி‌த் ப‌ட், மு‌ஷ்டா‌க் ஹுசை‌ன் ஆ‌கிய இர‌ண்டு ‌தீ‌‌விரவா‌திகளை கைது செ‌ய்தன‌ர். இ‌தி‌ல் அ‌ப்து‌ல் ரஷ‌ீ‌த், ஹ‌ி‌ஸ்பு‌ல் முஜா‌ஹ‌ி‌‌‌தீ‌ன் இ‌‌ய‌க்க‌த் தலைவ‌ர் சையது சலாவு‌தி‌னு‌க்கு நெரு‌க்கமானவ‌ர் ஆவா‌ர்.

கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌‌தீ‌விரவா‌திக‌ளிட‌மிரு‌ந்து ஒரு ஏகே து‌‌ப்பா‌க்‌கி, தோ‌ட்டா‌க்க‌ள், ரூ.1 ல‌ட்ச‌ம் பண‌ம் போ‌ன்றவை ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌‌ப்ப‌ட்டது. அவ‌ர்க‌ளிட‌ம் தொட‌ர்‌ந்து ‌விசாரணை நடைபெ‌ற்று வரு‌வதாக தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.