1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

புது‌ச்சே‌ரி‌யி‌ல் மா‌ற்று அர‌சியலை உருவா‌க்குவோ‌‌ம்: இடது!

புது‌ச்சே‌ரி இடதுசா‌ரி மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌லிநாத‌ன் ‌வி.பெருமா‌ள்
புது‌ச்சே‌ரி யூ‌னிய‌‌ன் ‌பிரதேச‌த்‌தி‌ல் கா‌ங்‌கிரசு‌க்கு ப‌திலான ஒரு மா‌ற்று அர‌சியலை உருவா‌க்குவோ‌ம் எ‌ன்று இடதுசா‌ரி‌க் க‌ட்‌சிக‌ள் கூ‌றியு‌ள்ளன.

புது‌ச்சே‌ரி அர‌‌சி‌ன் முறைகேடுகளை‌க் க‌ண்டி‌த்து‌ம், இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை தா‌‌ங்க‌ள் எ‌தி‌ர்‌ப்பத‌ற்கான காரண‌ங்களை ‌விள‌க்‌கியு‌ம் ஜூலை 16 முத‌ல் 19 வரை தொட‌ர் போரா‌ட்ட‌ங்க‌ள் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் செயல‌ர் ‌வி.பெருமா‌ள், இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் செயல‌‌ர் க‌லிநாத‌ன் ஆ‌கியோ‌ர் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

புது‌ச்சே‌ரி அர‌சி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ‌நி‌தி நெரு‌க்கடி‌க்கு ஆளு‌ம் க‌ட்‌சிதா‌ன் காரண‌ம் எ‌ன்று‌ கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ள அவ‌ர்க‌ள், ‌நி‌தி நெரு‌க்கடி ப‌ற்‌றி வெ‌ள்ளை அ‌றி‌க்கை வே‌‌ண்டு‌ம் எ‌ன்று கோ‌ரியு‌ள்ளன‌ர்.