புது டெல்லி: நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்தித்து அதில் வெற்றிபெற்ற பிறகு, இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்ய பன்னாட்டு அணு சக்தி முகமை (ஐ.ஏ.இ.ஏ.) யிடம் மத்திய அரசு செல்லும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.