1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஜோ‌திபாசு 95 ஆவது ‌பிற‌ந்த நா‌ள்!

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் ஜோ‌திபாசு
சுத‌ந்‌திர‌ப் போரா‌ட்ட ‌வீரரு‌ம் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மூ‌த்த தலைவருமான ஜோ‌திபாசு இ‌ன்று தனது 95 ஆவது ‌பிற‌ந்த நாளை‌க் கொ‌ண்டாடினா‌ர்.

அ‌ப்போது, இ‌ன்னு‌ம் நா‌ன் எ‌வ்வளவு நா‌ள் வா‌ழ்வேனோ தெ‌ரியாது. நா‌ன் இற‌ப்பத‌ற்கு‌ள் மே‌ற்குவ‌ங்க‌த்‌தி‌ல் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி தலைமை‌யிலான இடது மு‌ன்ன‌ணி ஆ‌ட்‌சி எ‌ட்டாவது முறையாக‌ப் பத‌வியே‌ற்‌பதை‌ப் பா‌ர்‌த்து‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்று உரு‌க்கமாக‌க் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

மே‌ற்குவ‌ங்க மா‌நில‌த்‌தி‌ன் மு‌ன்னா‌ள் ‌பிரதமரான ஜோ‌திபாசு‌வை அவ‌ரி‌ன் இ‌ல்ல‌த்‌தி‌ல், அவருட‌ன் ப‌ணியா‌ற்று‌ம் தோழ‌ர்களு‌ம் ப‌ல்வேறு க‌ட்‌சிக‌ளி‌ன் தலைவ‌ர்களு‌ம் நே‌ரி‌ல் வா‌ழ்‌த்து‌க்களை‌த் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

ஜோ‌திபாசு பெய‌ரிலான இணைய தள‌த்தை மே‌ற்குவ‌ங்க போ‌க்குவர‌த்து அமை‌ச்ச‌ர் சுபா‌ஷ் ச‌க்ரவ‌ர்‌த்‌தி துவ‌க்‌கி வை‌த்தா‌ர்.

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் மே‌ற்குவ‌ங்க ஆளுந‌ர் கோபால‌கிரு‌ஷ்ண கா‌ந்‌தி தனது மனை‌‌வியுட‌ன் கல‌ந்துகொ‌ண்டா‌ர்.