புது டெல்லி: மக்களவையில் மத்திய அரசிற்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமானால், இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்காக ஐ.மு.கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.