திருவனந்தபுரம்: நூறாண்டுகளைக் கடந்து நிற்கும் முல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளது என்று மீண்டும் கூறியுள்ள கேரள நீர் வளத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன், இப்பிரச்சனைக்கு புதிய அணை கட்டுவதுதான் நிரந்தரத் தீர்வு என்று சட்டப் பேரவையில் கூறினார்.