புதுடெல்லி: டோக்கியோவில் நடைபெறும் ஜி-8 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். தனது பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்தித்து இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அவர் முக்கிய பேச்சு நடத்துகிறார்.