புது டெல்லி: அணு சக்தி ஒப்பந்தம் தேசத்தின் நலனிற்கு உகந்தது என்றும், இவ்விடயத்தில் நிலைப்பாட்டை முடிவு செய்யும்போது அரசியலை விட தேச நலனிற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர்களிடம் முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் கூறியுள்ளார்.