1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ம‌ணி‌ப்பூ‌‌ரி‌ல் மோத‌ல்: 9 ‌தீ‌விரவா‌திக‌ள் ப‌‌லி!

இ‌ம்பா‌ல் ல‌ங்கோ‌‌ல் லபுபோ‌க்‌பி எ‌ன்.வ‌ங்பா புர‌ட்‌சிகர ம‌க்க‌ள் மு‌ன்ன‌ணி
ம‌ணி‌ப்பூ‌ரி‌ல் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் ‌தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம் பாதுகா‌ப்பு‌ப் படை‌யினரு‌க்கு‌ம் இடை‌யி‌ல் கட‌ந்த 48 ம‌ணி நேர‌‌த்‌தி‌‌ல் நட‌ந்த மோத‌லி‌ல் 9 ‌தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

‌இ‌தி‌ல் ‌தி‌ங்க‌ட்‌கிழமை 3 ‌தீ‌விரவா‌திகளு‌ம், நே‌ற்று மே‌லு‌ம் 6 ‌தீ‌விரவா‌திகளு‌ம் சு‌ட்டு‌க்கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதாக காவ‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

நே‌ற்று, இ‌ம்பா‌ல் அரு‌கி‌ல் உ‌ள்ள ல‌ங்கோ‌லி‌ல் ச‌ந்தேக‌த்‌தி‌ற்கு‌ரிய 3 ‌தீ‌விரவா‌திகளை காவ‌ல்துறை கமா‌ண்டோ‌க்க‌ள் சு‌ட்டு‌க்கொ‌ன்று‌ள்ளன‌ர். இ‌ம்பா‌ல் ‌கிழ‌க்கு மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள லபுபோ‌க்‌பி எ‌ன்ற இட‌த்‌தி‌ல் நட‌ந்த மோத‌லி‌ல் மேலு‌ம் 3 ‌தீ‌விரவா‌திகளை கமா‌ண்டோ‌க்க‌ள் சு‌ட்டு‌க்கொ‌ன்று‌ள்ளன‌ர்.

கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌தீ‌விரவா‌திக‌ளிட‌ம் இரு‌ந்து இர‌ண்டு கை‌த்து‌ப்பா‌‌க்‌கிக‌ள், ஏ.கே.47 து‌ப்பா‌க்‌கி ஒ‌‌ன்று, 3 வெடிகு‌ண்டுக‌ள் உ‌ள்பட ஏராளமான வெடிபொரு‌ட்க‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

இதையடு‌த்து இ‌ம்பா‌லி‌ல் ‌நிர‌ந்தர‌ப் பாதுகா‌ப்பு வளைய‌ம் ஏ‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளதாக‌த் தெ‌ரி‌வி‌த்த காவல‌ர்க‌ள், கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌தீ‌‌விரவா‌திக‌ளி‌ன் பெய‌‌ர் ‌விவர‌ங்களை வெ‌ளி‌யிட‌வி‌ல்லை.

இத‌ற்‌கிடை‌யி‌ல், ‌தி‌ங்க‌ட்‌கிழமை கொ‌ல்ல‌ப்ப‌ட்ட 3 ‌தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம் அவ‌ர்க‌ள் சா‌ர்‌ந்த புர‌ட்‌சிகர ம‌க்க‌ள் மு‌ன்ன‌ணி அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் எ‌ன்.வ‌ங்பா நே‌ற்று இறு‌தி அ‌ஞ்ச‌லி செலு‌த்‌தினா‌ர்.