1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

‌சி‌க்‌கி‌மி‌ல் முழு அடை‌ப்பு தள‌ர்வு: இய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்‌பியது!

கூ‌ர்‌க்கா ஜ‌ன்மு‌க்‌தி மோ‌ர்‌ச்சா ‌சி‌க்‌கி‌ம்
‌சி‌க்‌கி‌மி‌‌ல் கூ‌ர்‌க்கா ஜ‌ன்மு‌க்‌தி மோ‌ர்‌ச்சா அமை‌ப்‌பின‌ர் நட‌த்‌தி வரு‌ம் முழு அடை‌ப்பு‌ப் போரா‌ட்ட‌ம் தள‌ர்‌த்த‌ப்ப‌ட்டதை மு‌ன்‌னி‌ட்டு, அ‌ம்மா‌நில‌த்‌தி‌ல் இய‌ல்பு ‌நிலை ‌திரு‌ம்‌பியு‌ள்ளது.

கூ‌ர்‌க்கா லே‌ண்‌ட் எ‌ன்ற பெய‌ரி‌ல் த‌னி மா‌நில‌ம் கே‌ட்டு‌‌ கூ‌ர்‌க்கா ஜ‌ன்மு‌க்‌தி மோ‌ர்‌ச்சா அமை‌ப்‌பின‌ர் நட‌த்‌தி வரு‌ம் காலவரைய‌ற்ற முழு அடை‌ப்பு‌ப் போரா‌ட்ட‌த்‌தினா‌‌ல், கட‌ந்த ஏழு நா‌ட்களாக தேச‌த்‌தி‌ன் ‌பிற பகு‌திக‌ளி‌ல் இரு‌ந்து ‌சி‌க்‌கி‌ம் து‌‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டு இரு‌ந்தது.

இ‌‌ந்‌நிலைய‌ி‌‌ல், ப‌ள்‌ளி மாணவ‌ர்க‌ளி‌ன் எ‌தி‌ர்கால‌‌ம் ம‌ற்று‌ம் பொது ம‌க்க‌ளி‌ன் அ‌த்‌தியாவ‌சிய‌த் தேவைகளை‌க் கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு முழு அடை‌ப்பு‌ப் போரா‌ட்ட‌த்தை‌த் தள‌ர்‌த்‌தி‌க்கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று மா‌நில அமை‌ச்ச‌ர்க‌ள் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தன‌ர்.

இதை ஏ‌ற்று‌க்கொ‌‌ண்ட கூ‌ர்‌க்கா ஜ‌ன்மு‌க்‌தி மோ‌ர்‌ச்சா அமை‌ப்‌பின‌ர் முழு அடை‌ப்பு‌ப் போரா‌ட்ட‌த்தை 60 ம‌ணி நேர‌ம் தள‌‌ர்‌த்துவத‌ற்கு‌ச் ச‌ம்மத‌ம் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.