1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

பே‌ச்‌சி‌ற்கு பு‌த்ததே‌வ் அழை‌ப்பு: கூ‌ர்‌க்கா ‌நிராக‌ரி‌ப்பு!

கூ‌ர்‌க்கா லே‌ண்‌ட் ஜனமு‌க்‌தி மோ‌ர்‌ச்சா பு‌த்ததே‌வ் ப‌ட்டா‌ச்சா‌ர்யா
கூ‌ர்‌க்கா லே‌ண்‌ட் எ‌ன்ற பெய‌ரி‌ல் த‌னி மா‌நில‌ம் கே‌ட்டு‌ப் போராடி வரு‌ம் கூ‌ர்‌க்கா ஜனமு‌க்‌தி மோ‌ர்‌ச்சா அமை‌ப்‌‌பினரை பே‌ச்சு‌ நட‌த்த வருமாறு மே‌ற்குவ‌ங்க முத‌ல்வ‌ர் பு‌த்ததே‌வ் ப‌ட்டா‌ச்சா‌ர்யா ‌விடு‌த்த அழை‌ப்பை அவ‌ர்க‌ள் ‌நிராக‌ரி‌த்து‌ள்ளன‌ர்.

இதுகு‌றி‌த்து மே‌ற்குவ‌ங்க அர‌சி‌ற்கு கூ‌ர்‌க்கா ஜனமு‌க்‌தி மோ‌ர்‌ச்சா அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் ‌பிம‌ல் குரா‌ங் எழு‌தியு‌ள்ள ப‌தி‌‌ல் கடித‌த்‌தி‌ல், டெ‌ல்‌லி‌யி‌ல் ம‌த்‌திய மா‌நில அரசுக‌ள் இணை‌ந்து நட‌த்து‌ம் பே‌ச்‌சி‌ல் ம‌ட்டுமே தா‌ன் ப‌ங்கே‌ற்க ‌விரு‌ம்புவதாக‌க் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளா‌ர்.

மே‌ற்குவ‌ங்க அரசு கட‌ந்த வார‌ம் ‌விடு‌த்த அழை‌ப்பையு‌ம் கூ‌ர்‌க்கா ஜனமு‌க்‌தி மோ‌ர்‌ச்சா அமை‌‌‌ப்‌பின‌ர் ‌நிராக‌ரி‌த்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌‌க்கது.

இத‌ற்‌கிடை‌யி‌ல் ‌‌சி‌க்‌கி‌மி‌ல் இ‌ன்று‌ம் தொட‌ர்‌ந்த முழு அடை‌ப்பு‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ன் காரணமாக பொது ம‌க்க‌ளி‌ன் இய‌ல்பு வா‌ழ்‌க்கை கடுமையாக‌ப் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது.